IPL - Indian Premier League

பெங்களூரை கதறவிட்ட ரசல்: சொற்ப ஓட்டங்களினால் தோற்றது கொல்கத்தா

பெங்களூரை கதறவிட்ட ரசல்: சொற்ப ஓட்டங்களினால் தோற்றது கொல்கத்தா

12-ஆவது ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டத்தில் இன்று பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 10 ஓட்டங்களினால் வெற்றியைத் தவறவிட்டு தோல்வியடைந்தது.

இதன்மூலம், பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் தமது 2 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி அதிரடியில் மிரட்டியதுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை விளாசியிருந்தது. துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி 58 பந்தில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸ்ஸர்கள் அடங்கலாக (100), மொயின் அலி 28 பந்தில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸ்ஸர்கள் (66) ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் அன்ரு ரசல், சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதன்பின்னர், வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் மந்தகதியில் ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. எனினும், 11.5 ஓவர்களின் பின்னர் ரசல் களமிறங்கிய போது ஆட்டம் சூடிபிடித்தது. அப்போது கொல்கத்தா 4 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. வெளுத்துவாங்கிய ரசல் – ராணா ஜோடி அதிரடியால் பெங்களூர் வீரர்களை நொருக்கியெடுத்தனர். இருந்த போதிலும் 18 ஓவரில் 1, 2, 3 வது பந்துகளில் ஓட்டங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இறுதி ஓவரில் 24 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் 13 ஓட்டங்களை மட்டும் பெற்று 10 வெறும் ஓட்டத்தால் கொல்கத்தா தோல்வியடைந்தது. இதன்டி, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அன்ரு ரசல் 25 பந்தில் 9 சிக்ஸ்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் (65), நிதிஷ் ராணா 46 பந்தில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸ்ஸர்களுடன் (85-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் டேல் ஸ்டெயின் இரு விக்கெட்களை வீழ்த்தினார். இப் போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோஹ்லி தெரிவாகினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.