IPL - Indian Premier League

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

நேற்று (16) இடம்பெற்ற 12-ஆவது ஐபிஎல் தொடரின் 32-வது ஆட்டத்தில். ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்களினால் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களை விளாசியிருந்தது. துடுப்பாட்டத்தில் லோகேஸ் ராகுல் (52), டேவிட் மில்லர் (47), கிரிஸ் கெயில் (30) ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் ஜோப்ரா அர்செர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திருபதி (50), ஸ்ருவோட் பின்னி (33) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். எனினும், அணியால் வெற்றி இலக்கை தொடமுடியவில்லை. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு விக்கெட்களை வீழ்த்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.