Foot Ball

மெஸ்ஸி அசத்தல்: ரொனால்டோ வெளியேற்றம்: சுவாரஸ்யமாக நடந்தேறிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டிகள்.

மெஸ்ஸி அசத்தல்: ரொனால்டோ வெளியேற்றம்: சுவாரஸ்யமாக நடந்தேறிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டிகள்.

சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டிகளின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்றைய தினம் இடம்பெற்றன.
பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் மெஸ்ஸியின் அபார திறமையால் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் ரொனால்டோவின் ஜுவென்ட்ஸ் மற்றும் அஜாக்ஸ் அணிகள் மோதின. முதலாவது சுற்றில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் நேற்றைய தினம் 2-1 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணி வெற்றி பெற்று றொன்டோவின் ஜுவென்ட்ஸ் அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

இதன் மூலம் 8 வருடங்களின் பின்னர் ரொனால்டோ அரை இறுதிக்கு முன்னேற இயலாமல் வெளியேறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.