Home

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு எதிரான தொடர் சிம்பாப்பே வசமானது

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு எதிரான தொடர் சிம்பாப்பே வசமானது

சுற்றுலா ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சிம்பாப்பே அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று (14) நடந்த 3வது ஆட்டத்தில் சிம்பாப்பே அணி 131 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்று கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய சிம்பாப்பே 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 307 ஓட்டங்களை விளாசியது. துடுப்பாட்டத்தில் சீன் வில்லியம்சன் (109-ஆட்டமிழக்காமல்), கிரைக் ஏர்வின் (64), போல் மூர் (58*) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் எவரும் சொல்லும்படி பிரகாசிக்கவில்லை.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 46.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. துடுப்பாட்டத்தில் மொஹமட் உஸ்மான் (49), சுன்டன்கபோயில் ரிஷ்வான் (47) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ரயன் புருல் 4 விக்கெட்களை அபாரமாக கைப்பற்றினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.