IPL - Indian Premier League

ஐபிஎல்-12ல் சென்னை அணி ஆதிக்கம்: ஏழாது வெற்றியை பெற்றது

ஐபிஎல்-12ல் சென்னை அணி ஆதிக்கம்: ஏழாது வெற்றியை பெற்றது

இன்று (14) இடம்பெற்ற 12-ஆவது ஐபிஎல் தொடரின் 28-வது ஆட்டம் சற்றுமுன் நிறைவுற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னை அணி 5 விக்கெட்டால் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 வது வெற்றியையும் தமதாக்கிக்கொண்டுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை விளாசியிருந்தது. துடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக அதிரடியுடன் ஆடிய கிரிஸ் லைன் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸ்ஸர்கள் அடங்கலாக 51 பந்தில் (82) ஓட்டங்களை பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்ரு ரசல் (10) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்களை தகர்த்திருந்தார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா (58-ஆட்டமிழக்காமல்), ரவீந்திர ஜடேஜா (31) ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்று வென்றது. பந்துவீச்சில் சுனில் நரேன் (2) விக்கெட்களை வீழ்த்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.