IPL - Indian Premier League

நேற்றைய தினம் தமது முதல் வெற்றியை ருசித்தது கோஹ்லியின் பெங்களூர்

நேற்றைய தினம் தமது முதல் வெற்றியை ருசித்தது கோஹ்லியின் பெங்களூர்

நேற்று இடம்பெற்ற 12-ஆவது ஐபிஎல் தொடரின் 28-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டியில் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் தமது முதல் வெற்றியை ருசிபார்த்திருந்தது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை விளாசியிருந்தது. துடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக அதிரடியுடன் ஆடிய கிரிஸ் கெயில் 64 பந்தில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸ்ஸர்கள் அடங்கலாக (99-ஆட்டமிழக்காமல்) பெற்றிருந்தார். பந்துவீச்சில் ஜஷ்விந்தர் சஹால் இரு விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியின் ஆரம்பமே அதிரடியால் அதிர ஆரம்பித்தது. தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய அணி 19.2 ஓவர்களில் வெறும் இரு விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்று வெற்றியை ருசித்தது. துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி 53 பந்தில் (67), ஏபிடி.வில்லியர்ஸ் 38 பந்தில் (59-ஆட்டமிழக்காமல்) விளாசியிருந்தனர். ஆட்டநாயகனாக வில்லியர்ஸ் தெரிவாகினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.