IPL - Indian Premier League

தவான் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

தவான் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

12-ஆவது ஐபிஎல் தொடரின் 26-வது ஆட்டம் நேற்று இரவு இடம்பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்ட இந்தப் போட்டியில் டெல்லி 7 விக்கெட்டால் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை விளாசியது. அணி சார்பில் அதிகபட்சம் சுப்மன் கில் (65), அன்ரு ரசல் 21 பந்தில் (43) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கிரிஸ் மொறிஸ், காகிசோ ரபட 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு சிகார்த் தவான் (97-ஆட்டமிழக்காமல்), ரிஷப பாண்ட் (46) ஓட்டங்களை விளாசி கைகொடுக்க, அணியானது 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமிழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

இப்போட்டியில் சிகார்த் தவான் சதமடிக்க அருமையான வாய்ப்பு இருந்த போதிலும் கொலின் இங்ரம் வெற்றிக்கான சிக்ஸ்ஸரை விளாசி போட்டியை முடித்து வைத்ததால் அந்த வாய்ப்பு பறிபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கான சிக்ஸ் பெறப்படும் காணொளி, இங்கு அழுத்தி பார்க்கவும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.