Home

மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் புகுந்து விளையாடிய சிம்பாப்பே அபார வெற்றி

மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் புகுந்து விளையாடிய சிம்பாப்பே அபார வெற்றி

சுற்றுலா ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சிம்பாப்பே அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் சிம்பாப்பே அணி 4 ஓட்டங்களினால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றது.

மழை குறுக்கிட்டதால் 35 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 35 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் சைமன் அன்வர் (72), குலாம் சபீர் (56) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கைல் ஜர்விஸ் ஆபாரமாக 17 ஓட்டங்களுக்கு (4), டொனால்ட் திரிபனோ (3) விக்கெட்களை சரித்தனர்.

சிம்பாப்பே அணிக்கு 32 ஓவர்களில் 182 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டது. இதனை விரட்டிய சிம்பாப்பே 32 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 185 ஓட்டங்களை விளாசி வென்றது. துடுப்பாட்டத்தில் ரெகிஸ் ஷகப்வா (78-ஆட்டமிழக்காமல்), பீட்டர் மூ்ர் (45-ஆட்டமிழக்காமல்) பெற்று உதவினர். பந்துவீச்சில் ரொஹான் முஸ்தாபா இரு விக்கெட்களை கைப்பற்றினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.