IPL - Indian Premier League

எல்லை மீறிய ஆவேசம்: டோனிக்கு 50 வீதம் அபராதம்

எல்லை மீறிய ஆவேசம்: டோனிக்கு 50 வீதம் அபராதம்

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்திரசிங் டோனிக்கு போட்டித் தொகையில் இருந்து 50 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ராஜஸ்தானுடன் இடம்பெற்ற ஆட்டத்தில் இறுதி ஓவரின் ஐந்தாவது பந்து தொடர்பில் டோனி நடந்துகொண்ட விதம் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியின் வெற்றிக்கு 3 பந்தில் 8 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது 19.4 வது ஓவரில் உயரமாக போடப்பட்ட பந்திற்கு இரு ஓட்டங்கள் பெறப்பட்டது. இதன்போது குறித்த பந்தை நோ போல் (முறையற்ற பந்து) ஆக அறிவித்த நடுவர் பின்னர் அதனை நோ பால் இல்லை என்று அறிவித்தார்.

இதனை களத்திற்கு வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கப்டன் கூல் என்று இரசிகர்களினால் கொண்டாடப்படும் டோனி ஆவேசமடைந்து திடீரென ஆடுகளத்திற்குள் சென்று நோ பால் என்று அறிவிக்கப்படாதது குறித்து நடுவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்தச் செயல்களினால் காரணமாகவே அவர் ஐபிஎல் நடத்தை தொடர்பான விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.