Home

சுப்பர் மாகாண தொடரில் மாலிங்க, சந்திமால் அணிகள் இணைந்து சம்பியனாகியது

சுப்பர் மாகாண தொடரில் மாலிங்க, சந்திமால் அணிகள் இணைந்து சம்பியனாகியது

உலகக்கிண்ணத்திற்கான இலங்கைக் கிரிக்கெட் அணியை தெரிவு செய்யும் முகமாக இலங்கைக் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட சுப்பர் மாகாணக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு மற்றும் காலி அணிகள் இணைந்து சம்பியனாகியுள்ளது.

இன்று (11) இடம்பெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணத்தினால் கைவிடப்பட்டது. இதன்காரணமாக இரு அணிகளும் சம்பியனாகியுள்ளன.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய லசித் மாலிங்க தலைமையிலான காலி அணி 50 ஓவர்களில் (337/7) ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அசத்திய லஹிரு திரிமன்ன (115), வமிந்து ஹசரங்க (87) பெற்றனர். தினேஷ் சந்திமால் தலைமயிலான கொழும்பு துடுப்பெடுத்தாடவிருந்த போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக (227-ஓட்டங்கள்) அஞ்சலோ மத்தியூஸ், சிறந்த பந்துவீச்சாளராக (8-விக்கெட்டுக்கள்) லசித் மாலிங்க மற்றும் தொடரின் நாயகனாக (160-ஓட்டங்கள், 3 விக்கெட்டுக்கள்) தனஞ்ச டி சில்வா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.