IPL - Indian Premier League

சிக்ஸ்ஸர்களினால் பதறடித்த பொலார்ட்: மும்பைக்கு அசத்தல் வெற்றி

சிக்ஸ்ஸர்களினால் பதறடித்த பொலார்ட்: மும்பைக்கு அசத்தல் வெற்றி

12-ஆவது ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் நேற்று இரவு இடம்பெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்ட விறுவிறுப்பான இப்போட்டியில் பொலார்டின் சிறதடியால் இமாலய இலக்கை விரட்டியடித்த மும்பை அணி 3 விக்கெட்டால் அபாரமான வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு ராகுல் – கெயில் ஜோடி அதிரடியால் சிறந்த இணைப்பாட்டம் வழங்க 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக 64 பந்தில் சதம் கடந்த லோகேஸ் ராகுல் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸ்ஸர்கள் (100-ஆட்டமிழக்காமல்), கிரிஸ் கெயில் 36 பந்தில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸ்ஸர்கள் (63) ஓட்டங்களை பெற்றுச் சிறப்பித்தனர். பந்துவீச்சில் ஹார்டிக் பாண்டியா 57 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு தனி ஒருவனாக நின்று பொலார்ட் சிக்ஸ்ஸர்களினால் பதறடித்தார். இதன்மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்று மும்பை வெற்றியை தமதாக்கிக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கிரன் பொலார்ட் 31 பந்தில் 10 சிக்ஸ்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக (83) ஓட்டங்களை விளாசியிருந்தார். பந்துவீச்சில் மொஹமட் சமி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.