Home

உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெறவுள்ள முக்கிய வீரரர்கள்: வெளியானது முக்கிய தகவல்

உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெறவுள்ள முக்கிய வீரரர்கள்: வெளியானது முக்கிய தகவல்

15 பேர் கொண்ட இலங்கை உலகக் கிண்ண அணி 18 ம் திகதி இறுதி செய்யப்படும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது, இலங்கை உலகக் கிண்ண அணியில் திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, திசார பெரேரா, இசுறு உதான, அதகில தனஞ்சய, சுரங்க லக்மால், லசித் மாலிங்க உள்ளிட்ட 11 பேரும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், நடுவரிசை துடுப்பாட்ட வீரர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ஒருவரையும் இணைத்து கொள்ள ஆலோசிக்கப்படுகின்றது.

சுப்பர் மாகாண தொடரில் கலக்கிய செஹான் ஜெயசூரியா, மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.