Sri Lanka

திறமையை நிரூபித்துக் காட்டிய மத்தியூஸ் சுப்பர் மாகாண தொடரில் தம்புள்ளைக்கு 3ம் இடம்.

திறமையை நிரூபித்துக் காட்டிய மத்தியூஸ் சுப்பர் மாகாண தொடரில் தம்புள்ளைக்கு 3ம் இடம்.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தப்படும் சுப்பர் மாகாண கிரிக்கெட் தொடரின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று (10) இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் தம்புள்ள – திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி அணிகள் மோதிக் கொண்டது. இதில் 94 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற தம்புள்ள அணி சுப்பர் மாகாண தொடரில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

முதலில் ஆடிய தம்புள்ள 50 ஓவர்களில் ஆபாரமாக (325/5) பெற்றனர். துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் (101), பாணுக ராஜபக்ச (95), ஜீவன் மென்டிஸ் (50*), இசுறு உதான (34*) ஓட்டங்களை பெற்றனர். நிரோஷன் டிக்வெல்ல (4), தனுஷ்க, குணதிலக (15), ஒசத பெர்னாண்டோ (6) ஏமாற்றினர்.

கண்டியின் பந்துவீச்சில் திசார பெரேரா (54/2) நுவான் பிரதீப் (68/2), விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய கண்டி 42.2 ஓவர்களில் (231/10) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம (70), சங்கீத் குரே (57) ஓட்டங்களை பெற்றனர். சந்துரங்க டி சில்வா (30), திசார பெரேரா (21), திமுத் கருணாரத்ன (0) ஏமாற்றியிருந்தனர்.

தம்புள்ளயின் பந்துவீச்சில் இசுறு உதான (21/2), தனுஷ்க குணதிலக (34/2), ஜீவன் மென்டிஸ் (47/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.