Sri Lanka

காலி – கொழும்பு இடையிலான ஆட்டம்: அகில அசத்தல்

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தப்படும் சுப்பர் மாகாண கிரிக்கெட் தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று (08) நடைபெற்றது.

இன்றைய போட்டிகளுக்கான வீரர்கள் அணிக்கு, அணி மாற்றிப்பட்டு புதிய வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதன்படி, 6வது போட்டியில் இன்று லஹிரு திரிமன்ன தலைமையில் காலி – தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணிகள் மோதிக் கொண்டது. இந்தப் போட்டி மழை குறுக்கிட்டதால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது.

முதலில் ஆடிய காலி 50 ஓவர்கள் நிறைவில் (258/9) ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் வனிது ஹசரங்க (56), லஹிரு மதுசங்க (42*). மினட் பானுக (37), தனஞ்சய டி சில்வா (34) ஓட்டங்களை பெற்றனர். லஹிரு திரிமன்ன (6), குசல் மென்டிஸ் (11), மிலிந்த ஸ்ரீவர்த்தன ((8) ஏமாற்றினர்.

கொழும்பின் பந்துவீச்சில் அகில தனஞ்சய (53/5), சமிக கருணாரத்ன (48/2) விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அசித பெர்னாண்டோ (56/0), சீக்கு பிரசன்ன (39/0), மொஹமட் சிராஷ் (30/0) சோபிக்கவில்லை.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொழும்பு 7.1 ஓவர்களில் (55/0) பெற்ற போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்படப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.