Afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 147 ஓட்டங்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 147 ஓட்டங்கள்

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 147 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுளளது.

இந்த டெஸ்ட்டில் முதலில் ஆடிய அயர்லாந்து தமது முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் திம் முர்தாக் (54) ஓட்டங்களை பெற்றார். ஆப்கானிஸ்தனின் பந்துவீச்சில் மொஹமட் நபி 3 விக்கெட்டுக்களை சரித்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆப்கானிஸ்தான் 312 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் ரஹமத் சா (98), அஸ்கர் அப்கான் (67), ஹஸ்மதுல்லா சஹிட் (61) ஓட்டங்களை பெற்றனர். அயர்லாந்தின் பந்துவீச்சில் எஸ்.ஆர்.தோம்சன் 3 விக்கெட்களை வீ்ழ்த்தினார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 142 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. இதனைதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய அயர்லாந்து அணி நேற்றைய ஆட்ட நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி அபாரமாக 288 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில், அன்டி பல்ப்ரைன் (82), கெவின் ஒ ப்ரைன் (56) ஓட்டங்களை பெற்றனர். ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் ரஷிட் கான் 5 விக்கெட்டுக்களை அள்ளியிருந்தார்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 147 ஓட்டங்களை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி ஆடிவரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேலும் 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் இப்போட்டியை ஆப்கானிஸ்தான் வெற்றி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.