Home

இலங்கை அணிக்கு முழுமையாக வெள்ளையடித்தது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு முழுமையாக வெள்ளையடித்தது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 5-0 என்று வெள்ளையடிப்பு முறையில் முழுமையாக கைப்பற்றி அச்சத்தியுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி ஒருநாள் அரங்கில் இரு அணிகளுக்கு இடையிலான தொடரை தொடர்ச்சியான முறையில் 11 வது தடவையாக இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியானது 2016ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக எந்தவொரு தொடரையும் கைப்பற்ற முடியாமல் மிகாவும் பாரிதாபத்திற்குரிய நிலையிலேயே இருந்து வருகின்றது.

அதன்படி, இந்தத் தொடரையும் இழந்திருக்கின்றது. இந்தத் தொடருன் சேர்த்து இக்காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணி இரண்டு தடவைகள் 5-0 என்று இலங்கை அணிக்கு வெள்ளையடித்திருக்கின்றது.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் (56), பிரியமல் பெரேரா (33), இசுறு உதான (32) ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் காகிசோ ரபட 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 28 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதன்போது மழை குறுக்கிட்டதால் டக்வேர்த் லூயிஸ் முறையில் 28 ஓவர்களில் தென்னாபிரிக்க அணிக்கு 95 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் அய்டன் மார்க்ரம் (67) ஓட்டங்களை பெற்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.