Afghanistan

அயர்லாந்து அணியுடனான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை

அயர்லாந்து அணியுடனான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியானது இன்று 2வது நாளாகவும் இடம்பெற்றது.

இந்த டெஸ்ட்டில் முதலில் ஆடிய அயர்லாந்து தமது முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் திம் முர்தாக் (54) ஓட்டங்களை பெற்றார். ஆப்கானிஸ்தனின் பந்துவீச்சில் மொஹமட் நபி 3 விக்கெட்டுக்களை சரித்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆப்கானிஸ்தான் 312 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் ரஹமத் சா (98), அஸ்கர் அப்கான் (67), ஹஸ்மதுல்லா சஹிட் (61) ஓட்டங்களை பெற்றனர். அயர்லாந்தின் பந்துவீச்சில் எஸ்.ஆர்.தோம்சன் 3 விக்கெட்களை வீ்ழ்த்தினார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 142 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. இதனைதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவரும் அயர்லாந்து அணி இன்றைய ஆட்ட நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்களை பெற்ற நிலையில் களத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அனேகமாக இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே கூடுதலாக இருக்கின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.