England

இங்கிலாந்து பெண்களினால் வீழ்த்தப்பட்டது இலங்கை அணி

இங்கிலாந்து பெண்களினால் வீழ்த்தப்பட்டது இலங்கை அணி

இலங்கை பெண்கள் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 154 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து பெண்கள் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் நதாலிய ஸ்கேவியர் (93), அமி ஜோனஸ் (79), ஹெதர் க்தைட் (61) ஓட்டங்களை பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் ஒஷதி ரணசிங்க 2 விக்கெட் வீழ்த்தினார்.

மழை குறுக்கிட்டதால் இலங்கை பெண்கள் அணிக்கு 40 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டு வெற்றி இலக்காக 314 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இலங்கை அணியால் 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

துடுப்பாட்டத்தில் ஒஷதி ரணசிங்க (51-ஆட்டமிழக்காமல்), நிலக்சி டி சில்வா (45) ஓட்டங்களை பெற்றனர். இங்கிலாந்தின் பந்துவீச்சில் கத்தரின் ப்ருன்ட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.