Home

அறிமுக தொடரில் அமெரிக்கா தோல்வி

அறிமுக தொடரில் அமெரிக்கா தோல்வி

சர்வதேச ரி-20 அரங்கில் அமெரிக்கா அணி அறிமுகமாகிய இரு போட்டிகளை கொண்ட ரி-20 தொடரை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 1-0 என்று வெற்றி கொண்டுள்ளது.

அமெரிக்க அணியின் ரி-20 தலைவராக இந்திய நாட்டைச் சேர்ந்த சவரப் நேத்ராவல்கர் நேற்று இடம்பெற்ற போட்டியில் அறிமுகமாகினார். அவருடன், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, ஸ்டீவன் டெய்லர், மொனன்க் பட்டேல், ரோய் சில்வா, ஹைடன் வால்ஸ், ஆரோன் ஜோனஸ், ஜஸ்டீப் சிங், திமில் பட்டேல், எமோரல் ஹச்சன்சன் ஆகிய ஒன்பது வீரர்களும் அன்றைய தினம் அறிமுகத்தை பெற்றிருந்தனர்.

இதன்படி, முதலாவது போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற 2வதும் இறுதியுமான போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் சைமன் அன்வர் (62), ரொஹான் முஷ்தாபா (45) ஓட்டங்களை பெற்றனர். அமெரிக்காவின் பந்துவீச்சில் சவுரப் நேத்ராவல்கர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் டெய்லர் (49) ஓட்டங்களை பெற்றார். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பந்துவீச்சில் சுல்தான் அஹமட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.