Home

இலங்கை அணியை விடாது தொடரும் தோல்வி

இலங்கை அணியை விடாது தொடரும் தோல்வி

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியிலும் இலங்கை அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் சொற்ப ஓட்டங்களுக்குள் சுறுண்ட இலங்கை அணியை தென்னாபிரிக்க அணி இலகுவாக 6 விக்கெட்டுக்களினால் வெற்றி கொண்டிருந்தது.

வெறும் 131 ஓட்டங்களுக்குள் சுறுண்டுபோகவிருந்த இலங்கை அணியை 10 வது வீரராக களம் புகுந்திருந்த பந்துவீச்சாளர் உசுறு உதான தனது அதிரடியால் 57 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி 189 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள உதவினார். அன்ரிச் நொர்ஜோ 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த இலக்கை விரட்டிய தென்னாபிரிக்கா 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்று இலங்கையை தோற்கடித்தது. குயின்ரன் டி கொக் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த தோல்வி இந்த ஆண்டில் இலங்கை அணி பெற்ற 7 வது தொடர்ச்சியான தோல்வியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.