Australia

இருவருடங்களுக்கு பின்னர் ஒருநாள் தொடரை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா

இருவருடங்களுக்கு பின்னர் ஒருநாள் தொடரை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவந்த ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி நேற்றைய தினம் (3-2) என்று இந்திய மண்ணில் வைத்து கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தத் தொடரை கைப்பற்றும் அத்தனை வாய்ப்பும் இந்திய அணிக்கு இருந்த போதும் அவுஸ்திரேலிய அணியின் திடீர் எழுச்சி இந்தியாவிடம் இருந்து தொடரை இலாவகமாக தட்டிப்பறிக்க உதவியிருக்கின்றது.

ஆரம்பத்தில் முதல் இரு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி கொண்டிருந்த இந்திய அணி (2-0) என்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், உஸ்மான் கவாஜா என்ற தனி ஒருவனின் மிளிர்ச்சியும், ஏனைய வீரர்களின் வலுவான பங்களிப்பும் அடுத்தடுத்து நடந்த மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மாத்திரமல்லாமல் ஒருநாள் தொடரையும் வென்று கொடுத்துள்ளது.

2017 – ஜனவரிக்கு பின்னர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முடியாமல் வலுவற்றுப் போயிருந்த அவுஸ்திரேலிய அணிக்கு உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், கிடைத்த சிறந்த வெற்றித் தொடராக இத்தொடர் அமைந்திருக்கின்றது.

நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 272 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்த இலக்கினை விரட்டியடிக்க கூடிய பலமும், வீரர்களும் இந்திய அணிக்கு இருந்தபோதும், துர்ஷ்டவசமாக அவுஸ்திரேலிய வீரர்களின் சிறந்த பந்துவீச்சின் காரணமாக குறித்த இலக்கினை விரட்ட முடியாமல் 50 ஓவர்களில் 237 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இந்திய அணி 35 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. தொடரையும் கோட்டைவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் வைத்து அவுஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாகவும் ஒருநாள் தொடரை கைப்பற்றியிருக்கிறது. அத்துடன், ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் தொடரை வெற்றி கொண்ட முதல் அணி எனும் பெருமையையும் அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

எதுவெப்படியோ, உலகக் கிண்ணம் நெருங்கும் சந்தர்ப்பத்தில் இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையில் இத்தொடரை பறிகொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இலேசான கவலையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது போட்டியின் விபரச் சுருக்கம் –

அவுஸ்திரேலியா – 272/9 (50-ஓவர்கள்)
உஸ்மான் கவாஜா – (100),
பீட்டர் ஹன்ட்ஸ்ட்கொம் – (52).
புவனேஷ்வர் குமார் – 3 விக்கெட்டுக்கள்.

இநதியா – 237 (50-ஓவர்கள்)
ரோஹித் சர்மா – (56),
புவனேஷ்வர் குமார் – (46).
அடம் சம்பா – 3 விக்கெட்டுக்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.