Bangladesh

பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் சோகம் : இன்னிங்ஸால் தோற்றது

பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் சோகம் : இன்னிங்ளஸால் தோற்றது

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி இன்னிங்ஸினால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸால் தோற்கடித்திருந்த பங்களாதேஷ் அணியினர், அவ்வணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் இன்னிங்ஸால் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளனர்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி கொள்ளும் வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு பிரகாசமாக இருந்த போதிலும் இறுதியாக 3 விக்கெட் கைவசமிருக்க வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது சட்டென்று மூன்று விக்கெட்டுக்களையும் இழந்த பங்களாேதேஷ் அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3வது நாளான நேற்று முன்தினம் (10) நாணயசுழற்சியுடன் போட்டி ஆரம்பமாகியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் (77) ஓட்டங்கள் கைகொடுக்க, பங்களாதேஷ் அணி 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. நியூலாந்தின் பந்துவீச்சில் நெய்ல் வாக்னர் 4, ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய நியூலாந்து அணிக்கு ரோஷ் டெய்லர் இரட்டை சதம் விளாசி (200), ஹென்ரி நிகோல்ஸ் (107), கேன் வில்லியம்சன் (74) ஓட்டங்களை குவிக்க, நியூலாந்து அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 432 ஓட்டங்களை பெற்றபோது தமது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. பங்களாதேஷின் பந்துவீச்சில் அபு ஜயட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 221 ஓட்டங்களினால் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ் அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து நேற்றைய 4ம் நாள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்ற நிலையில் களத்தில் இருந்தது. இன்று தொடர்ந்து ஆடிய அணி 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் மஹ்மதுல்லா (67), மொஹமட் மிதுன் (47) ஓட்டங்களை பெற்றனர். நியூசிலாந்தின் பந்துவீச்சில் நெய்ல் வாக்னர் 5, ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இவர்களில் ஒவ்வொருவரும் இப்போட்டியில் மொத்தமாக 9 மற்றும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.