Foot Ball

மீண்டும் ரியல் மாட்ரிட் இல் தடம் பதித்தார் Zidane.

மீண்டும் ரியல் மாட்ரிட் இல் தடம் பதித்தார் Zidane.

அண்மைக்காலமாக தோல்வி பாதையில் பயணித்து வரும் ரியல் மாட்ரிட் இன்று முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

கடந்த பருவகாலத்தில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெற்றிகொண்டதுடன் அணியின் வெற்றி மனேஜராக 2 1/2 வருடங்கள் கடமையாற்றிய Zidane முகாமையாளர் பதவியில் இருந்து விளக்கினார். அத்துடன் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோவும் ஜுவென்ட்ஸ் அணிக்கு கோடை கால வீரர்கள் பரிவர்த்தனையில் மாற்றம் பெற்றார்.

இதனால் புதிய பருவகால போட்டிகளை புதிய மேனேஜர் சோலாரி இன் கீழ் ஆரம்பித்த ரியல் மாட்ரிட் தோல்வி பாதையிலேயே பயணித்து தற்சமயம் இப்பருவக்காலத்தில் எந்த ஒரு வெற்றி கிண்ணத்தையும் வெற்றிகொள்ள முடியாதென்கிற நிலையில் உள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் மத்தியில் மேனேஜர் ஆக சோலாரியை நீக்க வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வந்தது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் இன்று அது தொடர்பில் முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

மீண்டும் ரியல் மாட்ரிட் அணியின் மேனேஜர் ஆக Zidane ஐ அறிவித்துள்ளது ரியல் மாட்ரிட். ரியல் மாட்ரிட் அணியுடன் தொடர்ச்சியாக 3 சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்ற Zidane அணியுடன் மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

எனினும் தற்சமயம் தோல்விகளால் மட்டுமல்லாது வீரர்களுக்குள்ளும் பிரச்சினைகளை சந்தித்து வரும் ரியல் மாட்ரிட் தந்து அவளை நிலையில் மீளுமா அல்லது Zidane ரியல் மாட்ரிட் அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவாரா என கால்பந்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.