Home

வெளுத்துவாங்கிய ரூனர் – இமாலய இலக்கை விரட்டியடித்தது அவுஸ்திரேலியா

இந்திய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ரூனரின் அனல் பறந்த அதிரடியால் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றை பெற்றுள்ளனர்.

இந்திய அணியினர் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்திருந்த போதும் ஆடுகளத்தின் சாதகத்தன்மையை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவுஸ்திரேலிய அணி அந்த இலக்கை விரட்டியடித்து வெற்றியை தமதாக்கிக்கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி பறிகொடுக்கவிருந்த தொடரை மீதமாக ஒரு போட்டி இருக்கும் நிலையில் 2-2 என்று சமப்படுத்தியிருக்கின்றது. இதன்மூலம் இடம்பெறவிருக்கும் ஐந்தாவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை மேலோங்கச் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடி ஆட்டம் காட்டிய சிகார்த் தவான் சதமடித்து (143), ரோஹித் சர்மா (95), ரிஷப பந்த் (36) ஓட்டங்களை விளாசினர். அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 5, ஜையே ரிச்சர்ட்ஷன் 3 விக்கெட்டுக்களை சாய்த்து சத்தினர்.

பதிலுக்கு வெற்றியிலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அடித்து நொருக்கி ஓட்டங்களை குவித்து 47.5 வது ஓவரில் 6 விக்கெட்டு்க்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்று இந்தியாவை தோற்கடித்தனர். துடுப்பாட்டத்தில் பீட்டர் ஹன்ட்ஸ்கொம்ப் (117), உஸ்மான் கவாஜா (91), அஷ்ரன் ரூனர் 43 பந்தில் 6 சிக்ஸ்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் (84-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களை பெற்றனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் ஜஷ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ரூனர் தெரிவாகினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.