India

ஐசிசி இந்திய அணி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணுவத் தொப்பியுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி, ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்கள் அணிவது போன்ற தொப்பியை அணிந்தனர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தத் தொப்பியை அணிந்து விளையாடினர். இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

“கிரிக்கெட்டை அரசியல் ஆக்கும் இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறியுள்ளார்.

மேலும், இந்தியா இந்தப் போக்கை நிறுத்தாவிட்டால், காஷ்மீரில் இந்தியாவில் அத்துமீறல்களை நினைவூட்டும் விதமாக, பாகிஸ்தான் அணி கறு ப்பு பட்டையுடன் விளையாடும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இதனை எதிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.