South Africa

எனது ரண்களை பார்க்கிலும் விஷ்வ பந்துகளை எதிர் கொண்டது பெறுமதியானது

எனது ரண்களை பார்க்கிலும் விஷ்வ பந்துகளை எதிர் கொண்டது பெறுமதியானது

நேற்று (16) தென்னாபிரிக்க அணிக்கு எதிராகப் பெற்ற டெஸ்ட் வெற்றி, தான் இலங்கை அணியில் விளையாடும் போது கிடைத்த சிறந்த வெற்றி என்று வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்த ஆட்டத்தின் நாயகன் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் போட்டியின் நிறைவுக்கு பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொள்ளும் போதே குசல் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக பின்வரிசை வீரர்கள் எனக்கு நல்ல ஆதரவு தந்தனர். இதனால் நான் என்னை நம்பினேன். நான் எனது பங்கை செலுத்தினேன் தவிர நாங்கள் ஒரு அணியாக வென்றோம். முழு இன்னிங்ஸிலும் இணைப்பாட்டம் பெரியதாக இருந்தது. அதனால் நாங்கள் 304 ஓட்டங்களை விரட்டினோம்.

நீங்கள், ஒரு நபரையோ அல்லது ஒரு இணைப்பாட்டத்தையோ குறிப்பிட முடியாது. நாங்கள் அனைவரும் துடுப்பெடுத்தாடினோம். விஷ்வ பெர்னாண்டோ வந்தபோது நான் ஸ்கோர் பலகையை பார்க்கவில்லை நாங்கள் நிறைய ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. சிறிது சிறிதாக – மேலும் மேலும் விளையாட முயற்சித்தேன். விஷ்வ என்னிடம் கூறினார் “நான் உடலினால் பந்துகளை அடிக்கிறேன், நீங்கள் என்ன செய்ய முடியும் குசல் அண்ணா” என்று.

எனக்கு அதிக வலி ஏற்பட்டது, நான் எந்த பயமும் இல்லாமல் ஒற்றை ஓட்டங்களை ஓடி அவரை நிறுத்தினேன். அவர் பெரிய வேலையை செய்தார், அவர் ஆட்டமிழந்திருந்தால் நாம் அனைவரும் ஆட்டமிழந்திருப்போம். அவர் எப்படி பந்துகளை எதிர்கொண்டார் என்று தெரியவில்லை. எனது ஓட்டங்களை விட அவர் அவர் பந்துகளை எதிர்கொண்டது பெறுமதியானது.” என்றார்.

By: Pragas

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.