Gallery

குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் இலங்கை அணியை பாதித்தது : மனம் திறந்த ஹத்துருசிங்க

தொடர் தோல்விகளினால் தடுமாறிக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் புதிய தலைவர் மற்றும் அறிமுக வீரர்களை கொண்ட அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருக்கும் சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,

ஒக்டோபருக்கு பின்னர் எந்த போட்டிகளிலும் வெற்றி பெறமுடியாமல் இருப்பது எல்லோருக்கும் பலவிதமான கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான தொடரின்போது நாம் துர்ஷ்டசாலிகளாக இருந்தோம். குறைந்தது இரு டெஸ்ட் போட்டிகளிலாவது வெற்றியை பெற்றிருக்க முடியும். ஆனால் நாம் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் இடம்பெற்றுவிட்டது. ரங்கன ஹேரத் ஓய்வு பெறவுள்ளார் என்பதை அறிந்திருந்தோம், அகில தனஞ்சய சந்தேகநபராக நடவடிக்கைக்கு உள்ளாகினார். நாங்கள் களத்தடுப்பில் திறமையாக இல்லை பல பிடியெடுப்புக்களை தவறவிட்டிருந்தோம்.

நியூசிலாந்தில் முதல் போட்டியில் நாங்கள் மிகவும் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினோம். எனினும் ஒரு சமயத்தில் ட்ரென்ட் போல்டின் திறமையால் போட்டி எம்மிடம் இருந்து கைமாறியது.

அவுஸ்திரேலியாவிற்கு சென்று இளஞ்சிவப்பு பந்தில் விளையாடுவது இலங்கைக்கு மட்டுமல்ல எந்த அணிக்கும் சவாலானது. நாங்கள் பல காயங்களை எதிர்நோக்கியிருந்தோம், இவைகள்தான் காரணமாக அமைந்திருந்தது. அனைத்தும் ஏமாற்றமே” என்றார்.

மேலும், ‘ஒரு பக்கம் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் உள்ளன, மறுபக்கம் விளையாட்டு அமைச்சு மற்றும் கிரிக்கெட் சபையின் நகர்வுகள், அண்மையை சமூக வலைத்தள சர்ச்சைகள் அணியின் மீது தாக்கத்தை செலுத்துமா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,

“நான் அவ்வாறு தான் நினைக்கிறேன், நாம் அனைவரும் மனிதர்கள். ஐசிசியின் குற்றச்சாட்டுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது. நவம்பர் இறுதியில் தேர்வாளர்கள் மாறிவிட்டனர். தேர்வாளர்கள் மாறியபோது, தலைமை மாறியது. பயிற்றுவிப்பு ஊழியர்களிலும் மாற்றம் ஏற்பட்டது. அது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. பின்னர் வீரர்களுக்கு என்ன நடந்தது?, அழுத்தம் அதிகரித்திருத்தது. அவர்களுக்கு யாரை நம்புவது யாருடைய அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. அது மனிதனின் இயல்பு தான்” என்றார் ஹத்துருசிங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.