England

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில்;

மேற்கிந்தியதீவுகள் அணியுடன் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 448 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி வலுவான நிலையில் காணப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் (79), ஜோ பட்லர் (67) ஓட்டங்களை பெற்றனர். மேற்கிந்தியதீவுகளின் பந்துவீச்சில் கெம ரோஜ் 4 விக்கெட்டுக்களையும், ஷன்னன் கப்ரியல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய மேற்கிந்தியதீவுகள் துடுப்பாட்டத்தில் சொதப்பிய நிலையில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் ஜோன் கம்பல் (41), ஷன் டொவ்ரிச் (38) ஓட்டங்களை பெற்றனர். ஏனைய வீரர்கள் பிரகாசிக்கவில்லை. இங்கிலாந்தின் பந்துவீச்சில் மார்க் வூட் 5 விக்கெட்டுக்களையும், மொயின் அலி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினர்.

இதனைத்தொடர்ந்து, தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த இங்கிலாந்து அணி, 3வது நாளான நேற்றைய ஆட்ட நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்ற நிலையில் இருக்கின்றது. துடுப்பாட்டத்தில் ஜோ டென்லி (69), ஜோஸ் பட்லர் (56) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, ஜோ ரூட் (111) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.

இப்போட்டி நிறைவுறுவதற்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று இங்கிலாந்து 500 ஓட்டங்களினால் முன்னிலை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி, மேற்கிந்தியதீவுகளை ஆடப்பணித்தால் இங்கிலாந்திற்கு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.