Gallery

வெற்றியின் அருகாமையில் சென்று இலங்கை பெண்கள் அணி தோல்வி

தென்னாபிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை பெண்கள் அணி வெற்றியின் அருகில்ச்சென்று 7 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பெண்கள் அணி சிறப்பாக ஆடி 48 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் டானி வன் நெய்கேர்க் (102), அன்ரி ஸ்ரெயின் (75) ஓட்டங்களை பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் ஒஷந்தி ரணசிங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 226 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை பெண்கள் அணி 48 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் சசிகலா சிறிவர்த்தனே (49), ப்ரசாதனி வீரக்கொட்டி (47), நிலக்ஷி டி சில்வா (39) ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் மசபதா க்லாஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு எதிராக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.