India

குல்தீப் யாதவின் அபார முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரின் கடைசி போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஆனாலும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் T20 தரவரிசையில் தனது சிறந்த நிலையான இரண்டாம் நிலையை எட்டினார். முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத குல்தீப் மூன்றாவது போட்டியில் செய்ஃபெர்ட் மற்றும் முன்ரோவை வீழ்த்தி அசத்தினார்.

ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மிட்செல் சண்ட்னர் 4 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தையும், க்ருணால் பாண்ட்யா தனது சிறந்த நிலையான 58 வது இடத்தையும் பிடித்தனர்.

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாஸிம் 5 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை இடித்தார். இந்த தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்காவிடம் இழந்தனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.