England

3வது டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் :

மேற்கிந்தியதீவுகள் அணியுடன் இடம்பெற்றுவரும் 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதன்காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில் தோல்வியை தழுவக்கூடிய வாய்ப்பு பாரியளவில் காணப்படுகிறது.

கடந்த 9ம் திகதி ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் (79), ஜோ பட்லர் (67) ஓட்டங்களை பெற்றனர். மேற்கிந்தியதீவுகளின் பந்துவீச்சில் கெம ரோஜ் 4 விக்கெட்டுக்களையும், ஷன்னன் கப்ரியல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தில் சொதப்பிய நிலையில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் ஜோன் கம்பல் (41), ஷன் டொவ்ரிச் (38) ஓட்டங்களை பெற்றனர். ஏனைய வீரர்கள் பிரகாசிக்கவில்லை. இங்கிலாந்தின் பந்துவீச்சில் மார்க் வூட் 5 விக்கெட்டுக்களையும், மொயின் அலி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.