Home

நியூசிலாந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்மில்லன் பதவி விலகவுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் க்ரைக் மைக்மில்லன் இந்த ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருடன் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நியூசிலாந்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக்மில்லன் இருந்துவருகிறார். அவரது பயிற்றுவிப்பின் கீழ் நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை சென்று சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, நியூசிலாந்து அணிக்கான கடந்த ஐந்து ஆண்டுகால தனது துடுப்பாட்ட பயிற்றுவிப்பு சேவையை மைக்மில்லன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார். இது தொடர்பில் மைக்மில்லன் தெரிவிக்கையில், “நான், குடும்பத்தாருடன் பேசியிருந்தேன். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல தியாகங்களை செய்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும். எனவே, இது எனக்கு மாற்றத்திற்கான நேரம்” என்றார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.