Gallery

புதிய மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி திறமையை நிரூபிக்குமா?

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு எதிர்வரும் 13ம் திகதி முதல் இரு டெ,ஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு ரி-20 போட்டிகளை கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருக்கின்றது.

முன்னதாக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 13ம் திகதி டர்பனில் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியிருந்த நிலையில் தான் இத்தொடர் இடம்பெறுகிறது.

குறித்த தொடருக்கு பின்னர் இலங்கை அணியானது இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்து பரிதாபமான நிலையில் காணப்படுகிறது. அவ்வாறானதொரு தடுமாற்ற சூழலில் இடம்பெறும் இத்தொடரிலும் இலங்கை அணி பிரகாசிப்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

தொடர்ச்சியாக சொதப்பிவந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் உட்பட பலர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய அணித் தலைவருடன் புதுமுக வீரர்களையும் இணைத்து தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தப்புதிய மாற்றங்களுடன் களமிறங்கியிருக்கும் அணி எந்தளவிற்கு தமது திறமையை நிரூபிக்க போகின்றது என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.