IPL - Indian Premier League

IPL இல் வழங்கப்படும் பரிசுவிபரம் முழுவதும் உங்களுக்கு தெரியுமா?

IPL இல் வழங்கப்படும் பரிசுவிபரம் முழுவதும் உங்களுக்கு தெரியுமா?

கோடிகள் கொட்டிப்புரளும் கோலாகல கிரிக்கெட் திருவிழா என எல்லோராலும் அறியப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு என்கின்ற விபரத்தை உங்களுக்கு முழுமையாக தரப்போகின்றோம்.

எதிர்வரும் மே மாதம் 21 ம் திகதிவரை இடம்பெறவுள்ள 10 வது IPL தொடரில் மொத்தமாக 56 குழுநிலைப் போட்டிகள் அடங்கலாக இறுதி போட்டி வரையில் மொத்தம் 60 போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கும் இந்தப் போட்டித்தொடரில் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு 15 கோடி இந்திய ரூபாய்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படும்.இந்தப்பணம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையில் பங்கிடப்படும்.

இறுதி போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10 கோடி இந்திய ரூபாய்கள் வழங்கப்படுவதோடு,இந்தப்பணம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையில் பங்கிடப்படும்.

குழுநிலைப் போட்டிகளின் ஆட்ட நாயகன் விருதுக்கு வெற்றிக்கு கிண்ணத்துடன் 1 லட்சம் இந்திய ரூபாய்கள் கிடைப்பதுடன், Play Off சுற்றுக்களின் போதான ஆட்ட நாயகனுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 5 லட்சம் இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டிகளின் போதுமான சிறந்த பிடியெடுப்புக்காக Perfect Catch of the Match (VIVO) 1 லட்சம் இந்திய ரூபாய்கள் மற்றும் கையடக்க தொலைபேசி வழங்கப்படும்.

Perfect Catch of the Season என்று அழைக்கப்படும் தொடரின் மிகசிறந்த பிடியெடுப்புக்காக 10 லட்சம் இந்திய ரூபாய்கள் மற்றும் VIVO கையடக்க தொலைபேசி வழங்கப்படும்.

Yes Bank Maximum Season Award என்று அழைக்கப்படும் மிகசிறந்த சிக்ஸர்களைப் பெறும் வீரருக்காக கிண்ணத்துடன் 10 லட்சம் இந்திய ரூபாய்களும், The Superfast Fifty Award என்று சொல்லப்படும் வேகமான அரைச்சதம் பெற்ற வீரருக்கு கிண்ணத்துடன் 10 லட்சம் இந்திய ரூபாய்களும் வழங்கப்படும்.

அத்தோடு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியுடன் 10 லட்சமும், அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரருக்கு ஊதாநிற தொப்பியுடன் 10 லட்சமும் பரிசாக வழங்கப்படுகின்றது.

தொடரின் பெறுமதிமிக்க வீரருக்கு The most valuable player 10 லட்சம் இந்திய ரூபாய்களும் கிண்ணமும் வழங்கப்படுவதோடு, வளர்ந்துவரும் வீரருக்கான Emerging Player Award விருதுக்கு 10 லட்சம் வழங்கப்படும் .

Emerging Player Award விருதுக்கான வீரரை தேர்வு செய்யும் போது IPLT20.COM என்ற இணையத்தில் ரசிகர்களது வாக்கெடுப்புடன் தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் சேர்ந்து இந்த விருதுக்குரியவரை தேர்வுசெய்வர்.1991 ஏப்ரல் மாதம் 1 ம் திகதிக்கு பின்னர் பிறந்தவராகவும், 25 க்கும் குறைவான IPL போட்டிகளில் விளையாடியவர்களை மட்டுமே இந்த விருதுக்கு கவனத்தில் கொள்ளப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 Comment

1 Comment

  1. Pravin Cheetah

    April 20, 2017, 2:20 pm at 2:20 pm

    Magizhchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.