Sri Lanka

பலவீனமான அணிகள்; மிக வேகமான ஆடுகளம்; நடக்கப்போவது என்ன …???

பிரிஸ்பேன் ஆடுகளம் பற்றிய பார்வை

உலகின் மிக வேகமான ஆடுகளங்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள பிறிஸ்பேன் ஆடுகளமும் ஒன்று. இவ் ஆடுகளம் ஐந்தாவது நாள் வரை வேகமாகவும் பவுன்ஸை வழங்கக் கூடியதாகவும் அமைகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த பிரிஸ்பேன் மைதானத்தில் இதுவரை ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன முறையே 6,5 மற்றும் 2 போட்டிகளில் விளையாடிய போதும் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை.

அவுஸ்திரேலியாவிற்கு மிக ராசியான இந்த மைதானத்தில் அவுஸ்திரேலியா இறுதியாக 1988 இல் அதாவது 31 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோல்வியைத் தழுவியுள்ளது என்கின்ற விடயமும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

அவுஸ்திரேலியாவின்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் வோர்ன்-முரளிதரன் கிண்ணத்திற்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பிரிஸ்பேர்ன் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

முதலாவது போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும். இரண்டாவது டெஸ்ட் போட்டி கன்பரோவில் எதிர்வரும் பெப்ரவரி ஒன்றில் ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை ஆறு தடவைகள் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர்களை விளையாடி இலங்கை அணி அந்த ஆறு தடவைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. மொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் 11 தோல்வியையும் இரண்டு வெற்றி தோல்வியற்ற முடிவுகளுமே கிடைத்துள்ளன. எந்தவொரு வெற்றியும் இதுவரை கைகூடவில்லை.

பிரிஸ்போனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியைப் பெற்ற அதே வேளை மற்றைய போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

சந்திமால் தலைமையிலான இலங்கை அணி பெரிதளவில் பலமற்ற அணியாகவே களமிறங்குகிறது. கருணாரட்ன, மெண்டிஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. பந்துவீச்சில் லகிரு குமார மற்றும் சமீர ஆகியோர் லக்மாலுக்கு ஒத்துளைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அவுஸ்திரேலியாவும் இந்தியாவுடனான தோல்வியைத் தொடர்ந்து பலவீனமாகவே களமிறங்குகிறது. அவ் அணியில் மார்கஸ் ஹரிஸ், தல்விஸ் ஹெட், கவாஜா மற்றும் ரிம் பெய்ன் ஆகியோர் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களாக உள்ள அதேவேளை பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்ராக், அறிமுக வீரர் ரிச்சட்சன் மற்றும் லயன் என பலமான கூட்டணியே களமிறங்குகிறது. இவர்களோடு அறிமுக வீரர் பற்றர்சன், ஜோ பேர்ன்ஸ் மற்றும் லபுசானே ஆகியோர் நாளை களமிறங்கிகின்றனர்.

இலங்கை அணியில் திரிமன்னே, கருணாரட்ன ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக இறங்கவுள்ள அதே சமயம் மத்திய வரிசையில் சந்திமால், மெண்டிஸ், தனஞ்சய டீ சில்வா, ரோஷன் சில்வா ஆகியோர் களமிறங்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. விக்கெட் காப்பாளராக டிக்வெல்லவும், சுழல் பந்துவீச்சாளராக தில்ருவான் பெரேராவும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்களாக லகிரு குமார மற்றும் லக்மாலுடன் சமீர அல்லது ராஜித களமிறங்கலாம்.

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் பலவீனமாக உள்ள நிலையில் நாணயச்சுழற்சி பெரும் பங்கை வகிக்கும். பொதுவாக முதலில் துடுப்பெடுத்தாடவே இரு அணிகளும் விரும்பும்.

பார்படோஸ் மண்ணில் வரலாறு படைத்ததைப் போன்று பிரிஸ்பேனிலும் இலங்கை வரலாறு படைக்குமோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.