India

தமிழ்நாட்டின் நட்சத்திர சகலதுறை வீரர் இந்திய ஒருநாள் அணியில்…!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் இரண்டு அறிமுக வீரர்களான விஜய் சங்கர் மற்றும் சபுமான் ஹில் ஆகியோர் அவுஸ்திரேலியா பயணிக்க உள்ளார்கள்.

இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த லோகேஸ் ராகுல் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் விசாரணைக்காக இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களது இடத்தை நிரப்புவதற்காகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வயதான சகலதுறை வீரர் விஜய் சங்கர் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயதான இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சபுமான் ஹில் ஆகியோர் அவுஸ்திரேலியா பயணிக்க உள்ளார்கள்.

அவுஸ்திரேலிய- இந்திய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.