India

அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்:

💞💞💞
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்:

எதைப்பத்தி எழுதணும்னு முடிவெடுத்தாலும், ரொம்பவும் சிக்கலான விஷயம் என்னன்னா, எப்படி ஆரம்பிக்கறதுன்னு.. பல சமயம் சடார்னு உள்ளே இறங்கி சொல்ல வந்ததை சொல்லிட்டா, அந்த டெம்போ அதிகமாகாம கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிடும். அதனால, மேற்கொண்டு இந்த பதிவை படிக்கும் முன், இதில் இனைக்கப்பட்டிருக்கும் இரண்டு வீடியோக்களைப் பாத்துடுங்க. அது நிச்சயம் மேற்கொண்டு படிக்க சுலபமா இருக்கும்.

“Boyhood” படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் இரண்டுமே. Ethan Hawke தன்னோட பையன்கிட்ட இருவேறு தருணங்களில் தான் அதிகம் ரசித்த இசையைப்பற்றி அனுபவித்து பேசுவார். ஒரு கண்ணு இசைன்னா, எனக்கு இன்னொன்னு கிரிக்கெட். புதிதாக ஏதும் கேட்காத நேரங்களில் அல்லது கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நாட்களில் சாயங்காலம் சரக்கு கிடைக்காத சகோதரன் போல கொஞ்சம் தடுமாறிடுவேன்.

ஆனால், கிரிக்கெட், இசை இவற்றில் ஏதேனும் ஒன்று, அதிலும் ஒரே ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அது ராகுல் டிராவிட் மட்டும் தான், எனக்கு.

Ethan Hawke தன்னுடைய மகனிடம் தான் ரசித்த விஷயங்களை கொண்டுசேர்க்கும்போது விவரிக்க ஒரு சந்தோஷம் இருக்கும்.

ராகுல் டிராவிட் பிடிக்க மொத காரணம், அவருக்கு எதுவுமே எளிதில் கிடைச்சிடல. மஞ்சரேக்கர் உடம்பு சரியில்லாம போக, மாற்று வீரராக வந்த டிராவிட், ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டார். எப்படி? அஜய் ஜடேஜா இவருக்கு முன் ஆடும் அளவிற்க்கு அணியில் அரசியல். அந்த போட்டிக்குப் பிறகு மஞ்சரேக்கர் வெளிநாட்டில் ஆடவேயில்லை. டிராவிட் கொண்டிருந்த டெக்னிக் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான பொறுமையை பார்த்துடெண்டுல்கர் அவரை முன்னாடி ஆடவைத்தது மாஸ்டரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

Ethan Hawke சொல்றா மாதிரி, இந்த எடத்துல இருந்து கதையை சொல்ல ஆரம்பிக்கணும். அதுக்கு அப்புறம், ஒன் டே, ஆடத்தெரியாதுன்னு கேலி பேசினவங்களுக்கு பதில் சொன்னா மாதிரி 99 வேர்ல்டு கப்ல டாப் ஸ்கோரர் கதை. இப்படி கஷ்டப்பட்டு டீம்ல தன்னை கொஞ்சம் கொஞ்சமா நிரூபிச்சிட்டு இருந்த சமயத்துல, ஃபார்ம் அவுட். 2001 கொல்கத்தா டெஸ்ட் மேட்சில் டிராவிட் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் #3 ஆடி 25 ரன்னுல அவுட்,.அதே இன்னிங்ஸ் லக்ஷ்மன் செஞ்சுரி. டக்குனு கங்குலி ஃபாலோ ஆன் ஆன உடனே, லக்ஷமனை முன்னாடி அனுப்பிட்டு. டிராவிடை #6 அனுப்பி வெச்சது டிராவிட் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.

ஒரு பக்கம் குஜராத் பூகம்பத்துல இந்தியாவே சோகமா இருக்க, இன்னொரு பக்கம் அந்த மேட்ச் ஜெயிச்ச ஒரே காரணத்துக்காக சோர்ந்து போன இந்தியா டக்குனு நிமிர்ந்த கதை.

மூணாவது:

கங்குலி கேப்டன்சில இங்கிலாந்து போய், முடிஞ்சா என்னோட விக்கட்டை எடுத்திட்டு மத்தவங்களை தொடுடா பாப்போம்னு நின்னப்போதான், வெறித்தனமான இந்திய அணி ஃபார்ம் ஆச்சு. 2003 வேர்ல்டு கப்ல இந்தியா இறுதிப்போட்டி வர போகறதுக்கு முக்கிய காரணம், டிராவிட் கீப்பராகவும் இருக்கேனு ஒத்துக்கிட்டது.

அதுக்கு அப்புறம் இந்தியா பாகிஸ்தான்ல தொடர் வென்றது, அதுல ராவல்பிண்டில கொளுத்தற வெயில்ல உசுரு போக அடிச்ச 270.

அடிலெய்ட்ல ரெண்டு இன்னிங்ஸ்லையும் போட்ட சரவெடி. தன்னோட கேப்டன்சில வெஸ்ட் இண்டீஸ்ல ஆடவே முடியாத மரண பிட்சில் அடிச்ச 81 & 68, இப்படி இந்தியா வெளிநாட்டுல ஆடி ஜெயிச்ச/ட்ரை செய்த தொடர்கள்/போட்டிகள் எல்லாத்துலயும் டிராவிட் பங்கு இருக்கும்.

ரொம்ப வருஷம் முன்னாடியே நியூசிலாந்துலையும் அடுத்தடுத்து செஞ்சுரி போட்டு அது ஒரு தனி ரெகார்ட்.

எந்த ஃபார்மட் ஆடத்தெரியாதுன்னு சொன்னாங்களோ அதுல ஒரு 10000+ ரன்.

இப்படி ஒவ்வொரு சீரிஸ் பத்தியும், டிராவிட் எங்க எப்படி, எவ்ளோ கஷ்டப்பட்டு ரன் அடிச்சு, விக்கட்டை கொடுக்காம, மிடில் ஆர்டரை காப்பாத்தி, கேப்டன் கேட்டார்னு விக்கட் கீப்பிங் செஞ்சு, சேப்பல் செஞ்ச அரசியலுக்கு பலியாடாகி, இந்திய கிரிக்கெட்டின் ரொம்ப சுமாரான வேர்ல்டு கப் கதைக்கு வில்லனாகிப்போன வரலாறை சொல்லி முடிச்சு; அதுக்கு அப்புறம் திரும்ப எப்படி இந்தியா தள்ளாடும்போது தனி ஆளா இங்கிலாந்தில் அசராம ஆடி தொடர் நாயகன் விருது வாங்கின கதையை சொல்லணும்.

எந்த கேப்டனும் நிர்வாகமும் டிராவிட் வேணாம்னு முடிவெடுத்து 2011 வேர்ல்ட் கப் ஆடினாங்களோ, அதே கேப்டன், நிர்வாகம் டடீம் இப்போ மோசமான நிலமையில் இருக்கு, நீங்க ODI & T20 ஆடுங்கன்னு கேட்க வைக்கிற அளவுக்கு ஆடிட்டு ரிட்டயர் ஆன மனுஷன்.

டிராவிட் கிட்ட அவர் ஆடின கேம் எல்லாம் தாண்டி, சீனியர் டீமை கோச் பண்ணுங்கன்னு கேட்ட சமயத்துல, “இல்லை எனக்கு ஜுனியர் டீமை கொடுங்க, நான் அவங்க கூட இருந்துக்கறேன்னு…” சொன்ன அந்த நிதானம்.

ஒரு வேர்ல்டு கப் ரன்னர்ஸ் & வின்னர்ஸ் ரெண்டுமே கோச்சா சாதிச்சாச்சு.

ஒரு வயசுக்கு மேல, நம்ம வயசு ஆட்களோட மட்டுமே பேசிட்டு இருந்தா அப்டேட் ஆகமுடியாது. நிறைய விஷயங்களில் தேங்கிப்போயிடுவோம்.

விளையாட ஆரம்பிச்ச காலத்துல என்னோட 10 வயசு பெரியவங்க கூட ஆடினேன். இப்போ என்னோட 10 வயசு சின்ன பசங்க கூட ஆடறேன்.

நிறைய பேசி, பேசவிட்டு, எல்லாத்தையும் என்னன்னு கேட்டுட்டே இருக்கணும். அதே சமயத்துல டிராவிட் மாதிரி ரொம்ப Flexible நேச்சர் இருக்கணும். பெருசா கீப்பிங் செய்ய வராது தான். ஆனா . கொடுத்த வேலையை செய்யணும், தன்னை எப்படியாச்சும் நிலைநிறுத்திக்கணும்னு இருக்கற வெறி. சைலண்டா இருந்து காரியம் சாதிச்சி காட்டற திறமை. இது எல்லாம், பேசணும். சொல்லணும்.

If at all there’s one movie that has impacted me a lot is, “Peaceful Warrior”, but if there is one scene which I will stay put for life means, it will be from ‘Boyhood’.

And, if I have to select one person for my life means, it will be Rahul Sharad Dravid, forever!

Happy birthday, Thalaivaa!

Via Pady Nagaraj

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.