Home

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் -சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் முகாமிட்டது..!

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் -சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் முகாமிட்டது..!

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை,இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சகலருக்கும் இருவாரகால பொதுமன்னிப்பு காலத்தை வழங்கியுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டவும், அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கிலுமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரி ஸ்டீவ் ரிச்சர்ட்சன் தலைமையில் இலங்கையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் கிரிக்கெட் தொடர்பான ஊழல் மோசடிகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்கும்படியும், அது தொடர்பான தகவல்களை தருபவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படாது எனவும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இதேவேளை கிரிக்கெட்டில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு விசேட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தேவையான விதிமுறைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிய வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.