Home

மனைவிக்கு உதவிட இந்திய விக்கெட் காப்பாளரை அழைக்கும் ரோஹித் சர்மா..!

மனைவிக்கு உதவிட இந்திய விக்கெட் காப்பாளரை அழைக்கும் ரோஹித் சர்மா..!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, தனது மனைவிக்கு உதவியாக இருக்கவருமாறு இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பாண்டை அழைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, அந்த அணியின் தலைவரான டிம் பெயின் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்டை வம்பு சண்டைக்கு அழைத்தார்.

இந்திய ஒருநாள் அணிக்கு டோனி வந்துள்ளதால் உனக்கு வேலையில்லை, ஆதலால் நீ என்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வீட்டுக்கு வருகிறாயா என்று வம்பிழுத்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்மையில் அப்பாவான இந்திய ஆரம்ப வீரர் ரோஹித் சர்மா ,அதேபோன்று Babysitter ஆக தனது மனைவிக்கு உதவிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நகைச்சுவையாக இன்றுகாலை ரோஹித் சர்மா டுவிட்டர் பதிவு ஊடாக இதனை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.