Sri Lanka

இரண்டு தமிழ் பேசும் வீரர்களுடன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இலங்கை இளையோர் அணி…!!

அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

இதிலே இரு தமிழ் பேசும் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

யாழ் மத்திய கல்லூரியை சேர்ந்த விஜயகாந்த் விஜாஸ்காந்த் மற்றும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியை சேர்ந்த மொஹமட் சமாஸ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

வலதுகை லெக்ஸ்பின்னரான விஜாஸ்காந் ஏற்கனவே இந்திய 19 வயதிற்குட்பட்ட அணிக்கெதிரான 3 நாள் போட்டியில் இலங்கை சார்பாக அறிமுகமாகி இருந்தார்.

நிபுன் தனஞ்சய தலைமையில் அவுஸ்திரேலிய இளையோர் அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடிய ஐந்து வீரர்கள் இந்த இளையோர் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை இளையோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் டெஸ்ட் அணி

1.நிபுன் தனஞ்சய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி)

2.கமில் மிஷார (ரோயல் கல்லூரி),

3.கமகே சோனால் தினுஷ (மஹாநாம கல்லூரி)

4.அசான் டானியல் (புனித சூசையப்பர் கல்லூரி,மருதானை )

5.ரோஹான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி)

6.திலும் சுதீர திலகரத்ன (ரிச்மன்ட் கல்லூரி,காலி ),

7. விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

8.சந்துன் மெண்டிஸ் (ரிச்மன்ட் கல்லூரி)

9.சிஹான் கழிந்து (புனித செபஸ்தியான் கல்லூரி, மாத்தறை)

10.சமிந்து விஜேசிங்க (நாலந்த கல்லூரி)

11.ருவின் பீரிஸ் (திரித்துவ கல்லூரி)

12.மொஹமட் சமாஸ் (ஸாஹிரா கல்லூரி,மருதானை )

13. பவன் ரத்நாயக்க (மஹாநாம கல்லூரி)

14. தீவஸ்ண அபிஷேக்( ரிச்மண்ட் கல்லூரி)

15. தில்சான் மதுசங்க (விஜயபால தேசியக் கல்லூரி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.