India

பூஜாரா பாண்ட் தரவரிசையில் முன்னணியில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னி (123), அடிலெய்ட்(106), மெல்போர்னில் (193) நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய புஜாரா, மொத்தம் 521 ரன்கள் குவித்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து  மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளாா்.

இந்த தொடாில் இளம் வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 350 ரன்கள் குவித்த நிலையில் 20 பிடிகளையும் எடுத்தார். தொடரில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடா்ந்து பண்ட் தரவரிசைப் பட்டியலில் அதிரடியாக 21 இடங்கள் முன்னிலை பெற்று 17வது இடத்தை பிடித்துள்ளாா்.

சிட்னி டெஸ்ட் போட்டியில், 159* ஓட்டங்களினைப் பெற்ற பன்ட், அவுஸ்திரேலியாவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையும் படைத்தார்.

இதற்கு முன், மகேந்திர சிங் தோனி 19-வது இடத்தைப் பிடித்ததுதான் இந்திய விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட தரப்பட்டியலில்  முன்னணி வரிசையாக இருந்தது. 673 புள்ளிகளுடன் தோனியின் சாதனையை பன்ட் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில், 922 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.