Foot Ball

75 ஆவது ஆண்டு கால்ப்பந்தாட்டம் : அச்செழு வளர்மதி அணி வெற்றி

75 ஆவது ஆண்டு கால்ப்பந்தாட்டம் : அச்செழு வளர்மதி அணி வெற்றி

யாழ்ப்பாணக் கால்ப்பந்தாட்ட லீக் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, லீக்கின் ஏற்பாட்டில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் லீக்கில், ஏ பிரிவு அணிகள் என ஒரு பிரிவும், பி பிரிவு அணிகள் என ஒரு பிரிவும் காணப்படுகின்றன. இவற்றுக்கு தனித்தனியாக சுற்றுப்போட்டியானது நடத்தப்படுகின்றது. பி பிரிவு அணிகளுக்கிடையிலான போட்டியொன்று 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அச்செழு வளர்மதி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அணி மோதியது. போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பதிவு செய்யவில்லை.

தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில், வளர்மதி அணி, 06:05 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.