India

இவன் சூரியன்; உரசிட வேணாம்: கோஹ்லி – பேட்ட

இவன் சூரியன்; உரசிட வேணாம்:

“இப்போ ஜெயிச்சதுக்கு போர்ட் எவ்ளோ காசு தராங்கன்னு சொல்லிருக்காங்க…” u19 உலகக்கோப்பை ஜெயிச்சிட்டு கிரவுண்ட்லேயே கோஹ்லி கேட்டது இது. இந்தியா மாதிரி இங்கேயம், அங்கேயும், பொருளாதார சமநிலை இல்லாத ஒரு நாட்டில், 19 வயசு பையனுக்கு பணம் தான் பிரதானம். இந்தக் கேள்வியை கோஹ்லி கேட்டதுனால, அதை விமர்சனம் செஞ்சவங்க நிறைய பேரு. 120 கோடி மக்கள், அதுல 10 சதவீதம் கிரிக்கெட் ஆடக்கூடிய மனிதர்கள்ன்னு எடுத்துக்கிட்டாக்கூட அது 12 கோடி பேரு. அதுல ஒரு 10 சதவீதம்ன்னு பாத்தாலும், 1.2 கோடி மக்கள் எப்படியாச்சும் பெரிய லெவலில் ஆடிடணும்னு வெறிக்கொண்டு இருக்கற நாட்டுல, கோஹ்லிக்கு முன்னாடி பெரிய பிஸ்த்து பிளேயர்லாம் இருந்தாலும், ஆட்டம்ன்னு வந்துட்டா ஜெய்ப்பு மட்டும்தான் மேட்டர், அதுக்கு கேம் மட்டும் பத்தாது, உடலளவில் செம்மையா இருக்கணும்னு முடிவெடுத்து, வேற மாதிரி வந்து நின்ன மொத பிளேயர். எதிரி உன்ன அடிக்க வரான்னா, நீ மொறைக்கிறதுலயே குழம்பனும், நம்ம கையில் பெருசா பொருள் இல்லாட்டியும் உடல்மொழியிலேயே வித்தை காட்டணும்.

உலகத்துலேயே ரொம்ப மோசமான நிற வெறியர்கள் யாருன்னா ஆஸ்திரேலியர்கள் தான். அவங்க ஊருல ஆட வர டீமை, கட்டுரை எழுதி ஒரு பக்கமும், ரசிகர்கள் கூச்சல் வெச்சு இன்னொரு பக்கமும் முடிச்சு விடுவாங்க. எட்டு வருஷம் முன்னாடி உலகக்கோப்பை ஜெய்ச்சிட்டு, கெத்தா போன டீமை மண்டையில தட்டி இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் அனுப்பி விட்டுச்சு. பவுண்டரி பக்கம் நின்ன, கோஹ்லியை கலாய்க்க, அதுவரைக்கும் போன பிளேயர்ஸ் எல்லாம் ஒன்னும் பேசாம நிக்க, தூக்கி காமிச்சான், நடுவிரலை. அன்னிக்கி புடிக்க ஆரமிச்சிது கோஹ்லி பைத்தியம். கிட்டத்தட்ட ஒரே வயசு, ஒரே காண்டு இருக்கும், அவனுங்க அப்படி செய்யும்போது நம்மால ஓண்ணும் செய்ய முடியாம வீட்டுல ஒக்காந்து அவனுங்களை திட்டிட்டு இருப்போம், அன்னிக்கி கோஹ்லி காட்டினது நமக்காகவும் சேர்த்துதான்.

“இல்லை, இன்னொரு மேட்ச் கோஹ்லி ஆடட்டும், பாத்துக்கலாம்ன்னு…” டோனி எடுத்த மேட்ச் தான் கோஹ்லி மொத செஞ்சுரி அடிச்ச மேட்ச் ஆஸ்திரேலியால. அந்த தொடர்ல, இந்தியா பக்கம் 100 போட்ட ஒரே ஆள். அப்போவே அவன் 99 ரன் அடிச்சிருந்தப்போ, அவ்ளோ sldeging.

அங்கேந்து ஆரம்பிச்சவன் பொழுதுபோகாம தொரத்தி தொரத்தி அடிச்சான் எல்லாரையும் ODIல. டெஸ்ட் மேட்ச் ஆடறான், ஆனா பெரிய இன்னிங்ஸ் ஆட மாட்டேங்கிறானேன்னு சொன்னதுக்கு ஒரே வருஷத்துல 5, 200+. சரிப்பா, உள்ளூர்ல அடிச்சிட்டான், வெளியே போனா டவுசர் கழண்டிடும், திரும்ப இங்கிலாந்து போகணும்லன்னு வெயிட் பண்ணிட்டு இருந்த அத்தினி பேருக்கும் 2018 மறக்கவே முடியாது.

SA-ல ஆரம்பிச்ச மொத ரெண்டு இன்னிங்ஸ்லையும் அதே பழைய தப்பு. வெளிய போற பாலை துரத்தி, ரெண்டாவது இன்னிங்ஸ்ல across ஆடின்னு ரெண்டுமே, “ஐயோ என்னடா இவன்னு புலம்ப வெச்சது..” அடுத்த மேட்சை ஒரு 150, Morkel, Philanderer, Rabada, Ngidi, இப்படி அவங்க ஊருலே மட்டுமில்ல உலகத்துலேயே தலைசிறந்த பந்துவீச்சாளர்களை தனி ஆளா டீல் பண்ணது வெறி. 2013ல அடிச்ச செஞ்சுரியை விட, இது ஸ்பெஷல், ஏன்னா அது மரண பேட்டிங் ட்ராக் பிளஸ் காயம் காரணமா பவுலர்ஸ் விலகிடுவாங்க. இந்த செஞ்சுரியவே, டுபிளேஸிஸ் ஃபிளாட் விக்கட்ன்னு சொன்து சிரிப்புதான். ஏன்னா தொடர் முழுக்க அவங்க பக்கம் பெரிய ஸ்கொர் இல்லை.

மூணாவது மேட்சில், அஞ்சு ஃபாஸ்ட் பவுலர்ஸ், பிட்சே இல்லை, வெறும் புல்தரை தான் இருந்துச்சு முதல் நாள். 2004ல். மொஹாலி மேட்ச்ல, தேவைக்கு அதிகமா புல் இருந்த காரணத்தினால, கங்குலி ஆடல. டிராவிட் கேப்டன் பண்ண வேண்டிய நிலைமை. 14 வருஷம் கழிச்சு அதே மாதிரி ஒரு சீன். டாஸ் ஜெயிச்ச கோஹ்லி, பேட்டிங்கின்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கான். அந்த பக்கம் குழம்பி போய் நிக்கறாங்க. ஆடவே முடியாத பிட்ச், என்ன ஆனாலும் சரின்னு 54 & 41. ராகுல் டிராவிட் இதே மாதிரி சபீனா பார்க்ல அடிச்ச 81 & 68 மாதிரியே, கெத்தா ஆடின ரெண்டு இன்னிங்ஸ்.யார் குத்தினாலும் கத்தி குத்தும் மாதிரி, அவனுங்க செஞ்ச பிட்சில் அவங்களே மிரண்டு போய். மேட்சை முடிச்சிக்கலாமான்னு கேட்டாக்கூட, மூடிட்டு ஆடுங்கன்னு அடிச்ச அடி, சரவெடி.

இங்கிலாந்து:

போன தடவை 10 இன்னிக்ஸ்லையும் மண்ணைக்கவ்வின இடம். “எங்கூர்ல ஆடட்டும் பாக்கலாம்ன்னு” சொன்ன ஆண்டர்சன் சவாலை பொறுமையா கோஹ்லி டீல் செஞ்சது தான் ஹைலைட். தொடர்ல, நிறைய தடவை ஆண்டர்ஸன் பந்துவீச்சில் தடவினாலும், ஏதோ ஒரு லக்னால, ஆண்டர்சன் கிட்ட மட்டும் அவுட்டாவால. ஆடின மோத மேட்ச்லேயே செஞ்சுரி. மூணாவது மேட்சில ஒரு 97&103ன்னு 200 ரன்கள். தொடர் நாயகன் விருது. இங்கிலாந்துல ஆடட்டும் அப்புறம் ஒத்துக்கிடறோம்னு சொன்ன எல்லாரும், வேற வழியே இல்லாம, ஆமாம் கெத்துதானு ஒதுங்கி ஓரமா நின்னாங்க.

ஆனா, தப்பான பல முடிவுகளால, ஈஸியா ஜெயிச்சிருக்க வேண்டிய தொடரை கோட்டை விட்டுட்டு கோஹ்லி பிளேயரா மட்டும் வெற்றி அடைஞ்ச தொடர் அது.

ஆஸ்திரேலியா:

ஏற்கனவே அங்க நிறைய அடிச்சாச்சு, இனிமே அடிக்கறதுல்லாம் போன்ஸ்ன்னு தான் ஆரம்பிச்சதே. ஆஸ்திரேலியா இந்த தொடரை விளம்பரப்படுத்தினதே, ‘உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் வருகிறான், நீங்கள் வருகிறீர்களா அவன் ஆடுவதைப் பார்க்கன்னு தான்..”

வழக்கமா வாயை விட்றா மாதிரி, அவர் செஞ்சுரி அடிக்க மாட்டார்ன்னு ஆரம்பிச்சு வெச்சாங்க. பெர்த்ல வெறி கொண்டு போட்ட கம்மின்ஸை சாதுர்யமா ஆடின ஆட்டம் இந்த வருஷத்துல கோஹ்லி ஆடினதுலேயே தரமான ஆட்டம். இங்கிலாந்துல அடிச்சது அவரோட தன்மைய மாத்திக்கிட்டு ஆடினது. இங்க அப்படியே ஒவ்வொரு நிமிஷமும், “இதான் நமக்கு இருக்கற சந்தர்ப்பம், இதை விட்டுட்டா இன்னும் நாலு வருஷம் வெயிட் பண்ணனும்னு யோசிச்சு ஆடின ஆட்டம்.”

ஒரு காலத்துல சச்சின் மேல ஃபோகஸ் போக விட்டு, மத்தவங்க பூந்து ஆடிடுவாங்க. புஜாரா ஒரு பக்கம், “ஓத்தா நீங்க நின்னு த்ரோ அடிச்சாக்கூட என்ன ஒண்ணும் செய்ய முடியாதுனு ஒரு பக்கம் நிக்க..” இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து தொடரை ஜெயிச்சாச்சு.

“இந்த வார்னர் இருந்திருந்தா, ஸ்மித் இருந்திருந்தா.. இந்த கதை எல்லாம் வேலைக்கே ஆவாது.” அவங்க ரெண்டு பேரும் பவுலிங் போட்டு கிழிச்சிருப்பாங்களாக்கும்!

கேப்டன் கோஹ்லியை ஒதுக்கிட்டு, கொஞ்சம் பேட்ஸ்மேன் கோஹ்லியை பாத்தா, 2018 தரமான காதல் கதை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும்.

போன உலகக்கோப்பையில், ஜான்சன் வெறுப்பேத்தி ஈகோவோட விளையாடி கோஹ்லியை முடிச்சு விட்டான். அதுக்கு அப்புறம் ஜான்சன் சொன்ன ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டுக்கும் மரண அடி. போன T20 வேர்ல்டு கப், இப்போ அவங்க ஊருலே கொடி நாட்டினது.

ஒண்ணே ஒண்ணு மிச்சம் இருக்கு, வர வேர்ல்டு கப்புல, திரும்பவும் ஆஸ்திரேலியாவை முடிச்சுட்டு, கப் அடிச்சிட்டா இவ்ளோ நாள், “ஐயோ.. போச்சேன்னு.. பொலம்பினதுக்கு..”வெயிட்டா ஆட்டம் போட்டுடலாம்.

எட்டு வருஷம் முன்னாடி, கத்தி, திட்டி, மட்டம் தட்டின அந்த ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

இவன் சூரியன்; உரசிட வேணாம்….!

நன்றி #படி_நாகராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.