India

ஐபில் இந்தியவிலேயே நடக்கும்

2019 ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 23ம் திகதி முதல் இந்தியாவில் இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளை நடாத்த திட்டமிடபட்ட காலப்பகுதியில் நடாத்தபட இருப்பதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளை இலங்கை, தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவது தொடர்பில் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.

எனினும் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளில் போட்டிகளை நடாத்தினால் டிக்கெட் மற்றும் அனுசரணையாளர்களூடான வருமானத்தில் ஏற்படக்கூடிய இழப்பு , வீரர்களுக்கான காப்புறுதி தொகைகளில் ஏற்படக்கூடிய அதிகளவான செலவீனம் என்பவற்றை கருத்தில் கொண்டு போட்டிகளை மார்ச் மாதம் 23ம் திகதியில் இருந்து இந்தியாவிலேயே நடாத்த தீர்மானித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அணி உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.