Sri Lanka

அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் பலமான இலங்கை குழாம் தயார்…!!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவிறகான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நியூசிலாந்திற்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி அற்புதமாக துடுப்பெடுத்தாடிய மத்தியூஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிக் கொள்ள, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தனுஸ்க குணதிலக்கவும் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு பதிலாக குஷால் ஜனீத் பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்றில் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியையும் வெற்றி கொள்ளாத இலங்கை அணி இம்முறை அனுபவமற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஜெனவரி 24 இல் பிரிஸ்பேனில் தொடங்கும் அதே வேளை, இரண்டாவது டெஸ்ட் பெப்ரவரி 1 இல் கன்பரோவில் நடைபெறவுள்ளது.

அணி விபரம்

1தினேஷ் சந்திமல்

2.திமுத் கருணாரட்ன

3.லகிரு திரிமன்னே

4.தனஞ்சய டீ சில்வா

5.குஷால் ஜனீத் பெரேரா

6.குஷால் மெண்டிஸ்

7.நிரோஷன் டிக்வெல்ல

8.ரோஷன் சில்வா

9.சதீர சமரவிக்கிரம

10.லகிரு குமார

11.சுரங்க லக்மால்

12.நுவான் பிரதீப்

13.துஸ்மாந்த சமீர

14.கசுன் ராஜித

15.லக்சான் சந்தகான்

16.தில்ருவான் பெரேரா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.