உள்ளுர் செய்திகள்

சென்றலைட்ஸ் அணி கிரிக்கெட் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது

சென்றலைட்ஸ் அணி கிரிக்கெட் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது

சென்றலைட்ஸ் அணியின் தொடர்ச்சியான வெற்றியை எந்த அணியினாலும் கட்டுப்படுத்தடி முடியவில்லை. தொடர்ச்சியான 27 வெற்றிகள் என்ற சாதனையுடன், யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் வெற்றிக்கிண்ணத்தையும் தனதாக்கியது.

ஏ.பி விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் என்னும் இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். அதற்கிணங்க களமிறங்கிய சென்றலைட்ஸ் அணிக்கு, ஆரம்பம் சரியாக அமையவில்லை.

கௌதமன் ஓட்டமெதனையும் பெறாமல் வெளியேறினார். அதன் பின்னர் நிசானுடன் ஜோடி சேர்ந்த ஜெனோசன் ஆட்டத்தை கையில் எடுத்தார். ஜெனோசன் 41, நிசாந் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மத்திய வரிசையில் களமிற்கிய நிரோஜன் மற்றும் டர்வின் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முனைந்தனர்.

நிரோஜன் 47 ஓட்டங்களையும், டர்வின் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் களம்நுழைந்தவர்கள் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சென்றலைட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் கொக்குவில் சார்பாக பிரதீஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், துஸியந்தன் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், சாம்பவன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

178 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கே.சி.சி.சி அணியின் ஆரம்ப வீரர்களான ஜெயரூபன் – பானுஜன் ஜோடி அதிரடி காட்ட முனைந்தது. எனினும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜெயரூன் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பானுஜன் 27 ஓட்டங்களுடன் வெளிNயுறினார். அதன் பின்னர் களமிறங்கியவர்களில் சத்தியன் மற்றும் சாம்பவன் ஆகியோர் போராடினர் எனினும், அவர்களால் அணியை வெற்றி வரையில் அழைத்துச் செல்ல முடியவில்லை.

சத்தியன் 50 ஓட்டங்களையும், சாம்பவன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் கே.சி.சி.சி அணி முழுமையாக அடங்கியது. 19 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து 38 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக தசோபன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், மயூரன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், டர்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்றலைட்ஸ் அணியின் நிரோஜனும், தொடர் நாயகனாக ஜொனியன்ஸ் அணியின் லவேந்திராவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.