உள்ளுர் செய்திகள்

எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாத வெற்றிநாயகனாக 2018 இல் வலம் வந்த சென்றலைட்ஸ் அணி

எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாத வெற்றிநாயகனாக 2018 இல் வலம் வந்த சென்றலைட்ஸ் அணி

யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் 2018 ஆம் ஆண்டில் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அரங்கில் நிகழ்த்தப்பட்டிராத புதிய சாதனையையொன்றை தம்வசப்படுத்தியுள்ளது.

2018 இல் விளையாடிய எந்தப் போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக அந்த அணி வலம் வருகின்றது. சென்றலைட்ஸ் அணி மொத்தமாக 26 போட்டிகளில் 2018 ஆம் ஆண்டில் விளையாடி, அனைத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இவற்றில், ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ணம், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய வெற்றிக்கிண்ணம் (கே.சி.சி.சி வெற்றிக்கிண்ணம்), இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான வெற்றிக்கிண்ணம் என்பனவற்றையும் தம்வசப்பத்தியுள்ளது.

யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாடு அல்லது அனுசரணையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் பல நடைபெற்று வருகின்றன.

இந்தச் சுற்றுப்போட்டிகளில் யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 24 விளையாட்டுக்கழங்களின் அணிகள் பங்குபற்றி வருகின்றன. இதில் ஒரு அணியாக யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணியும் பங்குபற்றி வருகின்றது.

சென்றலைட்ஸ் அணியின் 2018 ஆம் ஆண்டின் வெற்றிப்பயணமானது இவ்வாறு அமைந்தது.

 1. ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற ஆளுநர் வெற்றிக்கிண்ண போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை ஒரு விக்கெட்டால் வென்றது.
 2. 2. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக்கிண்ண முதற்சுற்று ஆட்டத்தில் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணியை 6 விக்கெட்களால் வென்றது.
 3. ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக்கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியை 2 விக்கெட்களால் வென்றது.
 4. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக்கிண்ண முதல் சுற்று அரையிறுதிப் போட்டியில் சுழிபுரம் விக்டோரியா அணியை 7 விக்கெட்களால் வென்றது.
 5. மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக்கிண்ண அரையிறுதியில் மானிப்பாய் பரிஸ் அணியை 5 விக்கெட்களால் வென்றது.
 6. மே மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை, 3 விக்கெட்களால் வென்று கிண்ணம் வென்றது.
 7. மே மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில், ரைரோன் அணியை 96 ஓட்டங்களால் வென்றது.
 8. மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 5 விக்கெட்களால் வென்றது.
 9. ஜூன் மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில், றெஜின்போ அணியை 8 விக்கெட்களால் வென்றது.
 10. ஜூலை மாதம் 1 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் காலிறுதியில் விங்ஸ் அணியை 142 ஓட்டங்களால் வென்றது.
 11. ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் அரையிறுதியில் பற்றீசியன் அணியை 4 விக்கெட்களால் வென்றது.
 12. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியில் றெஜின்போ அணியை 10 ஓட்டங்களால் வென்றது.
 13. ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில், விங்ஸ் அணியை 101 ஓட்டங்களால் வென்றது.
 14. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியில், ஜொலிஸ்ரார்ஸ் அணியை 7 விக்கெட்களால் வென்றது.
 15. ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணம் சென்ரல் அணியை 43 ஓட்டங்களால் வென்றது.
 16. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியில், டிறிபேக் ஸ்ரார்ஸ் அணியை 118 ஓட்டங்களால் வென்றது.
 17. செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியில், திருநெல்வேலி கிரிக்கெட் அணியை 9 விக்கெட்களால் வென்றது.
 18. செப்ரெம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் காலிறுதியில் திருநெல்வேலி கிரிக்கெட் அணியை 87 ஓட்டங்களால் வென்றது.
 19. செப்ரெம்பர் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சுழிபுரம் விக்டோரியா அணியை 5 விக்கெட்களால் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.
 20. செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமொன்றில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியை 58 ஓட்டங்களால் வென்றது.
 21. செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை 7 விக்கெட்களால் வென்றது. 
 22. செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமொன்றில் ரைரோன் அணியை 2 ஓட்டங்களால் வென்றது.
 23. செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் அரையிறுதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 6 விக்கெட்களால் வென்றது.
 24. செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 5 விக்கெட்களால் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 25. ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் சுற்றுப்போட்டியின் பிளே ஓவ் சுற்றில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 16 ஓட்டங்களால் வென்றது.
 26. டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அரியாலை சுதேசிய நாள் கொண்டாட்ட இருபது – 20 சுற்றுப்போட்டியின் முதற் போட்டியில், கிறாஸ்கோப்பர்ஸ் அணியை 12 ஓட்டங்களால் வென்றது.

சென்றலைட்ஸ் அணியின் இந்த வெற்றியின் பின்னால் வீரர்கள் என்று சொன்னாலும், அவர்களை எல்லாம் பல்வாழ்தேவன் போல சின்ன சிலையாக்கி, பின்னால் பாகுபலியாய் நிற்பவர் அந்த அணியின் இணைப்பாளர் பொன்னம்பலம் கேதீஸன். இன்றைய காலகட்டத்தில், தான் விளையாடிய அணியின் போட்டியை பார்வையிடக்கூட முன்னாள் வீரர்கள் வரமாட்டார்கள்.

ஆனால், கேதீஸன் அணியை எப்போதும், சிறப்பாக ஒழுங்கமைத்து, போட்டிகளுக்கு அழைத்துச் செல்லல், ஆலோசனை வழங்கல், போட்டி முடிவடையும் வரையில் அங்கேயே நின்று இவ்வளவு வெற்றிகளையும் சென்றலைட்ஸ் அணி பெற உறுதுணையாக இருந்த உன்னதமான மனிதன்.

ஞானசீலன் ஜெரிக் துசாந்தின் தலைமைத்துவத்தின் நாகாராசா ஜெனோசன், சிறிஸ்கந்தராசா கௌதமன், குலேந்திரன் செல்ரன், பூபாலசிங்கம் டர்வின், பிரியலக்சன் உதயகுமார், நிரோஜன் பத்திநாதன், சாள்ஸ் பத்திநாதன், சிவலிங்கம் தசோபன், மயூரன் மகேந்திரன், சூரியகுமார் சுஜன், அலன்ராஜ் சிவபாதசுந்தரம், எஸ்.நிசாந்த், தங்கராசா கோகுலன், ஜேம்ஸ் ஜான்ஸன் 2018 ஆம் ஆண்டில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த சென்றலைட்ஸ் அணி, 2019 இலும் வெற்றிநடை போடுகின்றது.

ஜனவரி 7 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.