India

சிட்னி டெஸ்ட் வெற்றி-தோல்வியின்றி முடிவு; 72 வருட வரலாற்றை மாற்றி எழுதியது இந்தியா…!!

இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நிறைவுக்கு வந்தது. மழை காரணமாக போட்டி வெற்றி-தோல்வியுற்ற நிலையில் முடிவடைய, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று முதன்முறையாக அவுஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணியாக வரலாறு படைத்தது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இந்திய முதல் இன்னிங்ஸில் 7 இலக்கு நஷ்டத்திற்கு 622 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்தியது. இந்தியா சார்பில் புஜாரா 193 ஓட்டங்களைக் குவிக்க, ரிஷா பான்ட் 159 ஓட்டங்களை விளாசினார்.

அவுஸ்திரேலிய சார்பாக நாதன் லயன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலளித்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவுஸ்திரேலியா சார்பாக மார்கஸ் ஹரீஸ் 79 ஓட்டங்களைப் பெற, இந்தியா சார்பாக குலதீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பலோ-ஓன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா 6 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தொடர்ச்சியாக மழை குறுக்கிட ஆட்டம் ட்றோவில் முடிவடைந்தது.

இதன் காரணமாக 72 வருடங்களாக அவுஸ்திரேலியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா முதன்முறையாக டெஸ்ட்தொடரை வென்று வரலாறு படைத்தது. அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா வரலாற்றை எழுதியது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாவும் தொடரின் நாயகனாகவும் இந்த தொடர் முழுவதும் அசத்திய சத்தீஸ்வர் புஜாரா தெரிவானார்.

1947 தொடக்கம் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை விளையாடும் இந்தியா 1980/81, 1985/86, 2003/04 களில் தொடரைச் சமப்படுத்திய அதேவேளை ஏனைய 8 தடவைகளிலும் தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.