Gallery

மெஸ்ஸி, ரொனால்டோவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் லூகா மோட்ரிச்…!

மெஸ்ஸி, ரொனால்டோவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் லூகா மோட்ரிச்…!
கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதாக ரசிகர்களால் கருதப்படும் “பலோன் டி ஆர்” விருதை முதன்முறையாக குரேஷிய கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்தோறும் உயரிய விருதான “பலோன் டி ஆர்” விருது வழங்கப்பட்டுவருகின்றது.
1956 ம் ஆண்டு முதல் சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தின் அனுசரணையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.குறித்த விருதை கடந்த 10 வருடமாக போர்த்துக்கல் அணியின் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ,ஆர்ஜண்டீனா அணியின் லியானால் மெஸ்சி ஆகியோரே தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.
ஆனால் இம்முறை இந்த விருதை இந்த இரு நட்சத்திரங்களையும் பின்தள்ளிவிட்டு, புதியவரான குரேஷிய அணியின் தலைவர் லூகா மோட்ரிச் தனதாக்கியமை சிறப்பம்சமாகும்.
இந்த வருடம் ரஸ்யாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரில் குரேஷிய அணியை தலைமையேற்று இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன், இறுதி போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவினாலும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட லூகா மோட்ரிச்,தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றிருந்தார்.
இந்த ஆண்டு லூகா மோட்ரிச் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது, கால்பந்து உலக கிண்ண போட்டி தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்ற லூகா மோட்ரிச், அதனை தொடர்ந்து ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதையும் தனதாக்கிய நிலையிலேயே இப்போது இன்னுமொரு உயரிய விருதான” பலோன் டி ஆர்” விருதையும் தட்டிச் சாதித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு பிரேசில் வீரர் காகா “பலோன் டி ஆர்” விருதை கைப்பற்றிய பின்னர், 2008-ல் இருந்து 2017 வரை மெஸ்சியும், ரொனால்டோவும் 10 வருடம் கோலோச்சியிருந்தனர்.இந்த நிலையிலேயே அவர்களின் சாதனைகளுக்கு லூகா மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.