India

மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட வெற்றி வீரன் கவுதம் கம்பீர்…!

The Unsung Hero கவுதம் கம்பீர்

31 ரன் எடுப்பதற்குள் சச்சின் சேவாக் என இரு ஜாம்பவான்களின் விக்கெட்டுகள் மலிங்கவினால் தகர்க்கப்பட 275 எனும் இமாலய இலக்கை தூரத்த தடுமாறிய நேரம், இதுவரை எந்த ஓரு உலக கோப்பை இறுதி போட்டியிலும் இவ்வளவு பெரிய இலக்கு சேஸ் செய்யபடவில்லை என்ற பயமுறுத்தும் தரவுகள் , பங்களாதேஷ் தவிர வேற எந்த போட்டியிலும் பிரகாசிக்காத கோஹ்லி, தொடரில் நாற்பதே அடித்திராத கப்டன் டோனி , knock out மேட்ச்களில் மட்டும் விளையாடிய ரெய்னா , ஓரளவு போர்மில் உள்ள யுவராஜ், மலிங்கவின் அபார பந்து வீச்சு என இந்தியாவின் உலக கிண்ண கனவு கிட்டத்தட்ட தகர்ந்து போயிருந்த நேரம் .

எந்த வித டென்சனும் இல்லாமல் ரன்ரேட் 5.6 – 6 என்ற விகிதத்தை மெயின்டேய்ன் பண்ணியபடியே இலக்கை நோக்கி இந்தியாவை நகர்த்தி கொண்டிருந்தார் கம்பீர் . 19 வது ஓவரில் இந்திய அணி நூறை தொட கொஞ்சம் நம்பிக்கை துளிர்விடுகிறது. நம்பிக்கை பெருமூச்சு விடுவதற்குள்ளேயே கோஹ்லி ஆட்டமிழக்க டோனியுடன் சேர்ந்து பெறுமதியான 109 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் உலகக் கிண்ண கனவை நனவாக்கி இருந்தது. குலசேகர தவறவிட்ட ஓரு கடினமான கேட்சை தவிர வேறு எந்த வாய்ப்பையும் பலமான இலங்கை அணிக்கு வழங்காத கம்பீர் 97 ஓட்டங்களில் ஆட்டமிழக்கும் போது இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டு இருந்தது. அதிலும் 61 ஓட்டங்களை கம்பீர் ஓடி பெற்றிருந்தார்.

2011 உலகக்கிண்ணம் மட்டுமல்ல 2007 முதலாவது T20 உலக கிண்ணமும் கம்பீர் என்ற தனிமனிதன் இல்லாவிட்டால் இந்தியா நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. சேவாக் காயத்தினால் விலக யூசுப் பதானுடன் கம்பீர் களமிறங்க பதான் 15 , ஊத்தப்பா 8 , யுவராஜ் 14 , டோனி 6 என வெளியேறினாலும் தனியொருவனாக பாகிஸ்தான் பந்துவீச்சு க்கு எதிராக போராடி 54 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்று இந்தியாவை ஓரு கெளரவமான இலக்குக்கு எடுத்து சென்றார்.

2013 க்கு பின் அணி நிர்வாகத்துடன் முரண்பாடுகள் , கோஸ்டி மோதல்கள் என பிரச்சனைகளால் கம்பீர் தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் Ipl இல் கல்காத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2012 ,2014 வருடங்களில் சாம்பியன் பட்டம் பெற்று கொடுத்திருந்தார். 2009 இல் ICC இன் Test player of the year விருதை வென்ற கம்பீர் தொடர்ந்து 2012 இல் ODI team of the year இல் இடம்பெற்று இருந்தார். ஐந்து டெஸ்ட்களில் தொடர்ச்சியாக சதமடித்து மிரட்டியிருந்தார் .2009 இல் நியூசிலாந்து உடனான டெஸ்டில் 12 மணி நேரம் களத்தில் நின்று 436 பந்துகளில் 137 ஓட்டங்கள் பெற்று இந்தியாவை தோல்வியில் இருந்து மீட்டது , அதே வருடம் கொழும்பில் பெற்ற இலங்கைக்கு எதிராக பெற்ற 150+ ,அவுஸ்திரேலியாவுடனான 205 குறிப்பிடதக்க இன்னிங்ஸ்கள்

2013 ஆரம்பத்தில் இருந்து இவருக்கு போதாக்காலம் என்றால் மிகையில்லை. மறுபடியும் 2014 இங்கிலாந்து டெஸ்ட்டிலும்,2016 இல் நியூசிலாந்து அணி யுடனான டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினாலும் பெரிதாக சோபிக்காமல் ரசிகர்களை ஏமாற்றியிருந்தார்.

சேவாக், ஹர்பஜன், சகீர்கான் எப்படி பலவந்தமாக டோனி & co வினால் ஓரங்கட்டப்பட்டனரோ அதில் கம்பீரும் விதிவிலக்கல்ல. என்ன தான் இன்று கோஹ்லி , ரோகித் சர்மா என தூக்கி வச்சு ஆடினாலும் இவர்களால் கம்பீரை போல ஆகிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இன்று BCCI இனால் ஓரு ஒழுங்கான பிரியாவிடை கூட கொடுக்க முடியாமல் கம்பீர் தூக்கி வீசப்பட்டாலும் நேற்று இரவில் இருந்து உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த #ThankyouGamphir , #ThankyouGauthi என்ற ஹாஸ்டக் கள் கம்பீர் எப்படிப்பட்ட ஓரு ஹீரோ என்பதை பறைசாற்றும்

– சாரங்கன் பாலசுப்பிரமணியம் –

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.